இண்டர்போல் அறிக்கைக்குக் காத்திருக்கும் மலேசிய போலீஸ்

ஆட்டிசம் குழந்தையான ஜெய்ன் ரய்யான் அப்துல் மதின் கொலை விவகாரத்தில் உதவும் வகையில் இண்டர்போலின் அறிக்கைக்காக மலேசிய போலீஸ் காத்திருப்பதாக சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ உசேன் உமர் கான் தெரிவித்தார்.

கிடைக்கப்பெறும் இண்டர்போலின் அறிக்கையைக் கொண்டு, இது வரை மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் தகவலோடு சில ஒப்பீடுகளை செய்ய வேண்டி இருப்பதாகவும் டத்தோ ஹுசைன் குறிப்பிட்டார்.

டாமான்சாரா டாமாய், இடாமான் அடுக்கு மாடிக் குடியிருப்புப் பகுதியில் ஆதாரங்களைத் தேடும் பணி உட்பட, விசாரணை இன்னும் நடந்து வருவதாகவும் 225 பேரிடம் இருந்து வாய்மொழி வாக்குமூலத்தை போலீஸ் பதிவு செய்துள்ளதாகவும் டத்தோ ஹுசைன் கூறினார்.

போலீசின் தற்போதைய முதன்மை இலக்காக கொலை நடந்த இடம் குறித்த தேடுதல் நடந்து வருகிறது எனவும் வேறு எங்கேயோ கொலை செய்யப்பட்ட ஜெய்ன் ரய்யான் சடலம் கிடந்த இடத்திற்குக் கொண்டு வரப் பட்டிருக்கலாம் என புக்கிட் அமான் குற்றப் புலனாய்வு பிரிவின் இயக்குநர் டத்தோஸ்ரீ ஷுஹைலி முகமட் ஜெயின் தெரிவித்தார்.

கழுத்தில் உள்ளக் காயத்தின் அடுப்படையில் ஜெய்ன் ரய்யான் இறந்து 48 மணி நேரத்திற்குப் பிறகே கண்டெடுக்கப்பட்டிக்கலாம் எனவும் அவர் சொன்னார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்