இந்தியர்கள் விசுவாசமற்றவர்களா? டாக்டர் சிவபிரகாஷ் கண்டனம்

மலேசியாவில் உள்ள இந்தியர்கள் இந்நாட்டிற்கு முழு விசுவாசமாக இல்லை என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது கூறியிருப்பதற்கு மூடா கட்சியின் சிலாங்கூர் மாநில துணைத் தலைவர் டாக்டர் ரா. சிவபிகராஷ் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

முன்னாள் அரசியல்வாதி ஒருவர், இப்படி ஆத்திரமூட்டும் கருத்தை வெளியிட்டு இருப்பது துரதிர்ஷ்டானதாகும் என்று டாக்டர் சிவபிரகாஷ் வர்ணித்தார்.

நாடு சுதந்திரம் பெற்று 66 ஆண்டுகள் கடந்த நிலையில் இந்த நாட்டின் பொருளாதார மேன்மைக்கு முழுகெலும்பாக திகழ்ந்த இந்திய சமுதாயத்தினர், நாட்டிற்கு முழு விசுவாசமாக இல்லை என்று அந்நிய தொலைக்காட்சிக்கு துன் மகாதீர் பேட்டி அளித்துள்ளார்.

துன் மகாதீரின் இந்த செயல் மலேசியர்களிடையே கருத்து வேறுபாட்டை விதைப்பதற்கும், இனங்களுக்கு இடையே பிளவுகளையும் பேதங்களையும் ஏற்படுத்துவதற்கும் மேற்கொள்ளப்படும் முயற்சியாகும் என்று டாக்டர் சிவபிரகாஷ் குறிப்பிட்டார்.

தன்னை ஒரு தேசியவாதி என்று அடையாளப்படுத்திக்கொள்ளும் ஒரு முன்னாள் பிரதமரின் இந்த கருத்து, மலேசியாவை தங்கள் தாய் நாடாக போற்றி வரும் இந்தியர்களின் விசுவாசத்தை கேள்வி எழுப்பும் செயலாகும்.

துன் மகாதீர், தனது அரசியல் ஏமாற்றங்களை, வெறுப்புகளையும், விரக்தியையும் வெளிப்படுத்துவதற்கும், மலாய் சமூகத்தை கவர்வதற்கும் தனது அரசியல் சித்து விளையாட்டிற்கு இந்திய சமூகத்தை பகடை காயாகப் பயன்படுத்துவதை இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று டாக்டர் சிவபிரகாஷ் கேட்டுக்கொண்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்