சுற்றுலா பேருந்து தீப்பிடித்துக்கொண்டது

சுற்றுலா பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகி, தீப்பிடித்துக்கொண்டதில் பயணி ஒருவர் உயிரிழந்தார். இதர ஆறு பேர் காயமுற்றனர். இச்சம்பவம் இன்று சனிக்கிழமை அதிகாலை 3.50 மணியளவில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் 198 ஆவது கிலோ மீட்டரில் மலாக்கா, அலோர் காஜாவிற்கு அருகில் நிகழ்ந்தது.

சம்பவம் நிகழும் போது இரண்டு அடுக்குகளை கொண்ட அந்த சுற்றுலா பேருந்தில் 30 பயணிகள் இருந்துள்ளனர். அவர்கள் அனைவரும் சிங்கப்பூர் பிரஜைகள் ஆவர். இச்சம்பவம் தொடர்பாக அதிகாலை 3.55 மணியளவில் கிடைந்த அவசர அழைப்பைத் தொடர்ந்து 21 பேர் அடங்கிய தீயணைப்பு, மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக Ayer Keroh தீயணைப்பு நிலைய செயலாக்கப்பிரிவு தவைர் Zahrul Azha Mokhtar தெரிவித்தார்.

தீயணைப்புப் படையினர் சுமார் 11 நிமிடத்தில் ஸ்தலத்தை வந்தடைந்த போது அந்த சுற்றலா பேருந்தில் தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்ததாக அவர் குறிப்பிட்டார். அதற்கு முன்னதாக பயணிகள் வெளியேற்றப்படும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.சம்பந்தப்பட்ட பேருந்து, ஒரு மோட்டார் சைக்கிளை மோதியப் பின்னர் சாலை வழித்தடத்திலிருந்து விலகி தீப்பிடித்துக்கொண்டதாக கூறப்படுகிறது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்