இந்திய இளைஞர்களுக்கு மனிதவள அமைச்சின் 4.5 மில்லியன் வெள்ளி மதிப்பிலான இலவச பயிற்சித் திட்டங்கள். !

மனிதவள அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனங்களின் வாயிலாக, இந்திய இளைஞர்களுக்கு 4.5 மில்லியன் வெள்ளி மதிப்பிலான இலவசப் பயிற்சித் திட்டங்கள் வழங்கப்பட இருப்பதாக மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் இன்று அறிவித்தார்.

தைப்பூசத் தொருவிழாவை முன்னிட்டு இன்று பத்துமலைத் திருத்தலத்திற்கு வருகை தந்த ஸ்டீவன் சிம் சிறப்புரை ஆற்ற்கயில், இந்த அறிவிப்பை செய்தார்.

தைப்பூச விழாவை முன்னிட்டு மனிதவள அமைச்சின் சிறப்பு கூடாரம் பத்துமலையில் அமைக்கப்பட்டுள்ளது. மனிதவள அமைச்சின் கீழ் இயங்கும் இலாகாக்களின் முகப்புகள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன.

அவ்விலாகாக்களில் வழங்கப்படும் திட்டங்கள் மக்களிடம் கொண்டு சேர்க்கப்பட இந்தக் முகப்புகள் துரிதமாக செயல்பட்டன.

குறிப்பாக 4.5 மில்லியன் மதிப்பிலான பயிற்சித் திட்டங்கள் பத்துமலைக்கு வந்த இந்திய இளைஞர்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளன.

ஆகவே இந்திய இளைஞர்கள் இந்த வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஸ்டீவன் சிம் கேட்டுக் கொண்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்