இந்திய சமூகத்தின் வளர்ச்சிக்கு பல்வேறு உதவிகள்

பினாங்கு மாநில மேம்பாட்டு நீரோடையில் மாநிலத்தில் உள்ள இந்திய சமூகத்தின் வளர்ச்சித் திட்டங்களை கருத்தில் கொண்டு அவர்களுக்கு பல்வேறு வகைகளில் உதவிகளை வழங்குவதில் பினாங்கு அரசாங்கம் தொடர்ந்து கடப்பாட்டைக் கொண்டு இருப்பதாக மாநில முதலமைச்சர் Chow Kon Yeow தெரிவித்துள்ளார்.

இந்திய சமூகத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்கு பினாங்கு அரசாங்கம் கொண்டுள்ள இந்த கடப்பாடும், ஒத்துழைப்பும் தொடரும் என்று முதலமைச்சர் குறிப்பிட்டார்.

பினாங்கு தைப்பூச விழாயையொட்டி தண்ணீர் மலைக் கோயிலுக்கு இன்று வருகை புரிந்த முதலமைச்சர் Chow Kon Yeow தமது உரையில் இதனை தெரிவித்தார்.

Video A- Chow Kon Yeow – Start 00.00 – 00.23

பினாங்கு அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு இனத்தவரின் சமய விழாக்களுக்கு உரிய மதிப்பு அளித்து, சமய சுதந்திரத்தை பேணி வருகிறது என்பதற்கு இத் தைப்பூச விழா சான்றாகும் என்று Chow Kon Yeow குறிப்பிட்டார்.

இவ்வாண்டு தைப்பூச விழா மிகுந்த தனித்துவமாக காணப்பட்டதாக முதலமைச்சர் புகழாரம் சூட்டினார். குறிப்பாக தங்க இரதம், வெள்ளி இரதம் ஒரு சேர கோயிலை வந்தடைந்து இருப்பது பினாங்கு வாழ் இந்துக்களிடையே காணப்படும் ஒற்றுமை உணர்வை புலப்படுத்துதாக உள்ளது என்று Chow Kon Yeow தமது குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்