இந்திய மாணவர்களுக்கு அதிகம் TVET வய்ப்பு வழங்கப்படுவது உறுதி செய்யப்படும்

TVET எனப்படும் தொழில் திறன் கல்வியின் தரம் உயர்த்தப்பட, இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் ஆகியவற்றுடன் மலேசிய அரசாங்கம் ஒத்துழைக்க இருப்பதாக, துணைப் பிரதமரும் மலேசிய TVET கல்வியின் தலைவருமான டத்தோ ஶ்ரீ அகமாட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்தார்.

உலகின் மிக அண்மைய தொழில்நுட்பக் கல்வி மேம்பாட்டை இலக்காகக் கொண்டு இந்த ஒத்துழைப்பு அமைய இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தற்போது அதற்கான முயற்சிகள் தொடங்கப்பட்டு விட்டதாகவும், இன்னும் அதிகமான தொழில் திறன் பயிற்சிகள் வழங்கப்பட வழி வகை செய்யப்படும் என இன்று ஷா ஆலாம், TSR மாநாட்டு மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட 2024 ஒற்றுமைப் பொங்கல் நிகழ்ழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றுகையில், அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்நிகழ்ச்சிக்கு, ம.இ.கா.வின் தேசியத் தலைவர் டான் ஶ்ரீ விக்னேஸ்வரன், ஒற்றுமைத் துறையின் துணை அமைச்சர் சரஸ்வதி, கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதிராவ் வீரமான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில், 16 பலகலைக்கழகங்களைச் சேர்ந்த 200 மாணவர்களுக்கு TAB கருவிகள் துணைப் பிரதமர் அலுவலகம் வாயிலாக அகமாட் ஸாஹிட் ஹமிடி எடுத்து வழங்கினார்.

தொழில் திறன் பயிற்சிகளில் ஆர்வமும் ஈடுபாடும் அதிக உள்ள இந்திய இளையோருக்கு TVET வாய்ப்புகள் அதிகம் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்திய ஸாஹிட். குறிப்பாக, பள்ளிக் கல்வியை முழுமையாக நிறைவு செய்யாமல் பாதியிலேயே வெளியேறும் மாணவர்களுக்கு முதன்மை வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் எனக் கூறினார்.

இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த, துணைப் பிரதமர் ஸாஹிட்டின் சிறப்பு அதிகாரியான அரவிந்த அப்பளசாமி குறிப்பிடுகயில், கடந்த ஆண்டுகளில் 800க்கும் அதிகமான கல்வி உதவி நிதி வழங்கப்பட்டது. இவ்வாண்டு நம் இந்திய மாணவர்களுக்கு TVET தொழில் பயிற்சிக் கல்வி வாய்ப்பு மட்டும் வழங்கப்படாமல் வேலை வாய்ப்பையும் உறுதிப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என அரவிந்த அப்பளசாமி தெரிவித்தார்.

ஏறத்தாழ 5,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில், பரதம், கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், பொம்மலாட்டம், பண்பாட்டு இசை என அனைத்தும் இடம்பெற்றன.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்