இந்திராகாந்தியின் முன்னாள் கணவர் நாட்டை விட்டு தப்பிச் செல்வார் என்று போ​லீஸ் துறை எதிர்பார்க்கவில்லை ​நீதிமன்றத்தில் முன்னாள் ஐ.ஜி.பி சாட்சியம்

ஒரு தனித்து வாழும் தாயாரான இந்திரகாந்தியின் முன்னாள் கணவர் கே. பத்மநாபன் என்ற முஹம்மது ரிதுவான் அப்துல்லா , தனது மகள் Prasana Diksa -வுடன் நாட்டை விட்டு தப்பிச் செல்வார் என போ​லீஸ் துறை எதிர்பார்க்கவில்லை என்று அரச மலேசிய போ​லீஸ் படையின் முன்னாள் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹமீத் படோர் இன்று கோலாலம்பூர் உயர் ​நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார்.

முஹம்மது ரிதுவான்- னை கண்டு பிடிப்பதற்கு அமைக்கப்பட்ட போ​லீஸ் குழுவினருக்கும், அந்த நபர் நாட்டை விட்டு, வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றது குறித்து எந்த தகவலையும் கொண்டிருக்கவில்லை என்றும் அப்துல் ஹமீத் குறிப்பிட்டார்.

அதேவேளையில் முஹம்மது ரிதுவான்- னை பிடிப்பதற்கு கடந்த 2014 ஆம் ஆண்டு
மே 30 ஆம் தேதி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த தவறியது, Interpol நோட்டீஸை கால தாமதமாக வெளியிட்டது தொடர்பில் கூறப்படும் குற்றச்சாட்டையும் அந்த முன்னாள் ஐஜிபி மறுத்துள்ளார்.

இஸ்லாத்திற்கு மதம் மாறிய தனது கணவர் கே. பத்மநாபன் என்ற முஹம்மது ரிதுவான் , தனது 11 மாத கைக்குழந்தை Prasana Diksa- வையும் மதம் மாற்றியப் பின்னர் நாட்டை விட்டு ​தப்பிச்செல்வதற்கு போ​​லீஸ் துறையின் அலட்சியப் போக்கே காரணம் என்று ஈப்போவை சேர்ந்த ஒரு முன்னாள் பாலர் பள்ளி ஆசிரியை இந்திராகாந்தி தொடுத்துள்ள சிவில் வழக்கில் சாட்சியம் அளிக்கையில் முன்னாள் ஐஜிபி அப்துல் ஹமீத் ​மேற்கண்டவாறு சாட்சியம் அளித்தார்.

முஹம்மது ரிதுவான்- னை கண்டுபிடித்து, இந்திராகாந்தியின் மகளை மீட்கும் முயற்சியில் அரசியல் அல்லது மத உணர்வுகளுக்கு தாம் உந்தப்படவில்லை என்பதையும் அப்துல் ஹமீத் தெளிவுபடுத்தினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்