இந்து அறப்பணி வாரியம் மூன்று இந்திய மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கியுள்ளது

பினாங்கு, மார்ச் 31 –

பினாங்கு இந்து அறப்பணி வாரியம் மூன்று இந்திய மாணவர்களுக்கு இன்று நிதியுதவி வழங்கியுள்ளதாக அதன் துணைத்தலைவரும், செனட்டருமான டாக்டர் ஆர். லிங்கேஸ்வரன் கூறினார்.

சார்வின் என்பவர் வணிகம் மற்றும் மேலாண்மை துறையில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவன். குடும்பத்தில் ஒரே மகனாக இருந்து வரும் சார்வின், அவரின் தந்தை ஒரு முன்னாள் இராணுவ வீரர் என்பதுடன் அவரின் தாயார் உடலமின்றி இருப்பதாலும் அவரின் மருத்துவ செலவுகளுக்கே அதிக பணம் செலவிட நேரிடுகிறது. சார்வினின் கல்வி படிப்பிற்கு உதவும் வகையில் அம்மாணவனுக்கு குறிப்பிட்ட தொகை நிதியுதவியாக வழங்கப்பட்டது.

அடுத்த ஒரு மாணவியாக நிவேதா. அம்மாணவி Architecture துறையில் முதலாம் ஆண்டு பயின்று வரும் மாணவி. தொழிற்சாலை தொழிலாளியாகவும், துப்புரவு தொழிலாளியாகவும் பணிபுரியும் அவரின் பெற்றோர்கள் மாதம் வருமானமாக 2,000 வெள்ளிக்கு குறைவாகவே பார்கின்றனர். மேலும், அவருக்கு கீழ் இரண்டு பேர் பயின்று வருவதாக தெரியவந்துள்ளது. அம்மாணவிக்கு ஆதரவளிக்கும் வகையில் நிதியுதவி வழங்கப்பட்டது.

ஒரு குடும்பத்தை உயர்த்தி மேலே கொண்டு செல்வதற்கு கல்வி என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். அந்த வகையில் பினாங்கு இந்து அறப்பணி வாரியம், பல இந்திய மாணவர்கள் உயர்கல்வியை முடிக்கவும் அவர்களின் குடும்ப பொருளாதாரத்தை மாற்றியமைக்கவும் உதவுவதில் உறுதியாக இருப்பதாக டாக்டர் லிங்கேஸ்வரன் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்