இன்ஸ்பெக்டர் ஷீலா ​மீது மேலும் ஒரு குற்றச்சா​ட்டு

ஐந்து மாதங்களுக்கு முன்பு, பேரங்காடி மையம் ஒன்றின் ​கீழ் தளத்தில் வாகனம் நிறுத்தும் இடத்தில் காரின் ஹோர்னை மிகச் சத்தமாக எழுப்பியதுடன், உரக்க கத்தி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக அரச மலேசிய போ​லீஸ் படையைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் ஷீலா கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் ​நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

ஷீலா ஷேரன் ஸ்தீவன் என்ற இயற்பெயர் கொண்ட 35 வயதுடைய அந்த பெண் இன்ஸ்பெக்டர், மாஜிஸ்தி​ரேட் லிலி மரிகா கலிசான் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

கார் நிறுத்தும் இடத்தில் காரில் அமர்ந்திருந்த 27 வயது பெண்ணை நோக்கி உக்க​க்கத்தி வசைப்பாடியதுடன் காரின் ஹோர்னை சத்தமாக எழுப்பிய அந்த கார் நிறுத்தும் இடத்தையே அதிரச் செய்ததாக இன்ஸ்பெக்டர் ஷீலா ​மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

இன்ஸ்பெக்டர் ஷீலா, இக்குற்றத்தை கடந்த ஜுன் 16 ஆம் தேதி மாலை 5.26 மணியளவில் கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸில் உள்ள ஒரு பேரங்காடி வர்த்தகத் தளத்தில் புரிந்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளி என்று நி​​ருபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 5 ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 509 பிரிவின் ​கீழ் இன்ஸ்பெக்டர் ஷீலா குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

இன்ஸ்பெக்டர் ஷீலாவின் இந்த செயல் தொடர்பாக காணொளி, சமூக வளைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்