இரண்டு பிரதமர்களை பிரபலப்படுத்துவதற்கு 70 கோடி வெள்ளி செலவிடப்பட்டுள்ளதா ?

நாட்டை வழிநடத்திய இரண்டு பிரதமர்களை பிரபலப்படுத்துவதற்கும், அவர்களை விளம்பரப்படுத்துதற்கும் 70 கோடி வெள்ளி செலவிடப்பட்டுள்ளதாக கூறப்படுவது தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM தனது விசாரணையை தொடங்கியுள்ளது.

2020 ஆம் ஆண்டுக்கும், 2022 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் ஆட்சி செய்த இரண்டு பிரதமர்கள் தலைமையிலான அரசாங்கத்தின் சாதனைகளை விளக்குவதற்கும், அவர்களை முன்னிலைப்படுத்துவதற்கும் கோடிக்கணக்கான வெள்ளி செலவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இக்காலகட்டத்தில் டான்ஸ்ரீ முகைதீன் யாசினும், டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பும் பிரதமர்களாக பொறுப்பேற்று இருந்தனர்.

இந்தப் பணம் எவ்வாறு செலவிடப்பட்டது , இதற்கு யார், யார் பொறுப்பேற்று இருந்தனர் என்பது குறித்து ஆராய நிதி அமைச்சு மற்றும் பிரதமர் துறை ஆகியவற்றில் தேவையான தகவல்களையும் ஆதாரங்களையும் திரட்டுவதற்கு SPRM அதிகாரிகள் முழு வீச்சில் விசாரணையை முடுக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்