கழுத்து சிக்கி ஆடவர் உயிரிழந்தார்

வங்கியின் ATM இயந்திர அறையில் தானியங்கி கதவில் கழுத்து சிக்கியிருக்கலாம் என்று நம்பப்படும் நபர், சம்பவ இடத்திலேயே மாண்டார்.

இச்சம்பவம் இன்று அதிகாலையில் ஷா ஆலம், கோத்தா கெமுனிங்கில் உள்ள வங்கி ஒன்றில் நிகழ்ந்தது. மது போதையில் இருந்து இருக்கலாம் என்று நம்பப்படும் 50 அல்லது 60 வயதுடைய அந்த நபர், ஏ.டி.எம். அறைக்குள் படுத்த வாக்கில் கிடப்பதாக பொது மக்களிடமிருந்து கிடைத்த தகவலைத் தொடர்ந்து போலீசார் அவ்விடத்திற்கு விரைந்ததாக ஷா ஆலம் மாவட்ட போலீஸ் தலைவர் முகம்மட் இக்பால் இப்ராஹிம் தெரிவித்தார்.

வங்கியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராவின் பதிவை சோதனையிட்ட போது, அந்த நபர் நேற்று இரவு 11.48 மணிக்கு அந்த வங்கிக்குள் நுழைந்துள்ளார்.

பின்னர் அந்நபர், ஏ.டி.எம்.இயந்திர அறையிலிருந்து நள்ளிரவு 12.01 மணியவில் வெளியேற முற்பட்டுள்ளார். அப்போது தானியங்கி கதவு மூடும் தருவாயில் அவரின் கழுத்து பகுதி சிக்கி, அங்கேயே சரிந்து விழுந்துள்ளார்.

மறுநாள் காலை 6 மணிக்கு அந்த தானியங்கி கதவு திறந்த போது, அந்நபர் உள்ளே இறந்து கிடப்பது தெரியவந்துள்ளது. சவப்பரிசோதனக்காக அந்த நபரின் பிரேதம், கிள்ளான், துவான்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக முகம்மட் இஃபால் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்