இரண்டு ம்.ம்.இ.ஏ அதிகாரிகள் சுடப்பட்டனர்

கோத்தா கினாபாலு, ஏப்ரல் 7 –

கூனாக் கடற்பரப்பில் ஓபி காஸ் பாகார் லாவுட், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனமான ம்.ம்.இ.எ அதிகாரிகள் மீது குண்டு பாய்ந்தது.

இன்று காலை 8.30 மணியளவில் பாதிக்கப்பட்ட அதிகாரிகள் சந்தேகத்திற்கிடமான படகு ஒன்று கடலில் செல்வதை கண்டறிந்ததாக சபா மற்றும் லாபுவான்னின் மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனத்தின் இயக்குநர் செ எங்கு சுஹைமி செ எங்கு டாயிக் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட படகை நெருங்கிய போது சந்தேகிக்கும் மூன்று நபர்கள் பாதிக்கப்பட்ட அதிகாரிகளை நோக்கி துப்பாக்கியை நீட்டி சுட்டதாகவும் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதமின்றி அவர்கள் தப்பியதாகவும் எங்கு சுஹைமி கூறினார்.

பின்பு, அடுத்த கணமே அப்படகு சம்பவ இடத்திலிருந்து தப்பி சென்றதாகவும் பாதிக்கப்பட்டவர்களை குனாக் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும் எங்கு சுஹைமி தெளிவுபடுத்தினார்.

இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்