இராஜ இராஜேஸ்வரர் ஆலய சிவராத்திரி விரத சிறப்பு வழிபாடு

சிராம்பான், மார்ச் 2 –

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாபார் ரில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீமகா இராஜ இராஜஸ்வரர் ஆலயத்தின் சிவராத்திரி விரத சிறப்பு வழிபாடு நிகழ்வு, வரும் மார்ச் 8 ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 7.31 மணிக்கு வெகுசிறப்பாக நடைபெறவிருக்கிறது.

அன்று வெள்ளிக்கிழமை இரவு 7.31 மணிக்குத் தொடங்கி மறுநாள் அதிகாலை வரை நான்கு கால சிவ வேள்வி மற்றும் 108 சங்காபிஷேகம் சிறப்பு வழிபாடு செந்தமிழ் திருமறைகளால் நடைபெறவிருப்பதாக ஆலய நிர்வாக சபை தெரிவித்துள்ளது.

இந்த சிவராத்திரி பூஜையை வழிநடத்த தமிழ்நாட்டைச் சேர்ந்த திருக்கயிலாய பரம்பரை ஸ்ரீ கந்தப்பரம்பரை சூரியனார் கோயில் ஆதின ஸ்ரீ கார்யம் வாமதேவ ஸ்ரீமத் சிவாக்கர தேசிக சுவாமிகள் வருகை தரவிருக்கிறார்.

இந்நிகழ்வில் மகா சிவராத்திரியில் 108 சிவலிங்கத்திற்கு மகா அபிஷேகத்துடன் சிறப்பு பூஜை செய்யப்படவுள்ளது. சிவலிங்கத்தைப் பெறவிருக்கும் அன்பர்கள் 108 வெள்ளியை செலுத்தி ஆலய நிர்வாகத்திடம் தங்களின் பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம்.

நான்காம் சாமத்து பூஜையில் 108 சங்காபிஷேகம் நடைபெறும். சங்காபிஷேகத்தின் போது பக்தர்கள் தங்களின் கையால் சங்குகளை ஏந்தி வலம் வந்து, அபிஷேகத்திற்கு எடுத்து கொடுக்கலாம்.

சங்காபிஷேக உபயத்திற்கு பக்தர்கள் 51 வெள்ளி செலுத்தி ஆலய நிர்வாகத்திடம் பெயரை பதிந்து கொள்ளலாம். இந்த தொகை சங்குகளை ஏந்தி வலம் வருவதற்கு மட்டுமே என்று ஆலய நிர்வாக சபையினர் தெரிவித்துள்ளனர்.
தொடர்புக்கு : 017-322 5400.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்