இராணுவ கேடட் வீரர் சூசைமாணிக்கம் தாக்கப்பட்டார்

கோலாலம்பூர், மார்ச் 8 –

அரச மலேசிய கடற்படை பயிற்சி வீரர் ஜ. சூசைமாணிக்கம், இறப்பதற்கு முன்பு, லூமூட் கடற்படைத்தளத்தின் கெடி சுல்தான் இட்ரிஸ் பயிற்சி மையத்தில் அவரை ஒரு அதிகாரி தாக்கியதாக முன்னாள் பயிற்சி வீரர் ஒருவர், கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று சாட்சியம் அளித்தார்.

அரிப் என்று அடையாளம் கூறப்பட்ட அந்த அதிகாரி, சூசைமாணிக்கத்தை கீழே படுக்கச் சொல்லி, அவரின் வயிற்றில் ஏறி, அமர்ந்ததுடன், அவரை கண்மூடித்தனமாக அறைந்ததாக சூசை மாணிக்கத்துடன் பயிற்சியில் ஈடுபட்ட முன்னாள் வீரரான ஆனாஸ் ஹாகிமி மாட் தெரிவித்தார்.

இந்த சம்பவம் சூசை மாணிக்கம் இறந்த 2018 ஆம் ஆண்டு மே 19 ஆம் தேதிக்கு முதல் நாள் நிகழ்ந்தது. சூசைமாணிக்கத்தை அந்த அதிகாரி, சரமாரியாக தாக்கிக்கொண்டு இருந்த போது Rahim என்ற மற்றொரு அதிகாரி, அதனை தடுத்து நிறுத்தினார் என்று அந்த முன்னாள் வீரர் தமது சாட்சியத்தில் தெரிவித்தார்.

27 வயது சூசைமாணிக்கம், பயிற்சியின் போது மூச்சுத்திணறலுக்கு ஆளாகி, இறந்து விட்டதாக கூறப்பட்டுள்ள வேளையில் அவரின் மரணத்தில் குற்றத்தன்மை நடந்துள்ளதாக கூறி, அந்த வீரரின் தந்தை ஜ. ஜோசப், சிவில் வழக்கை தொடுத்துள்ளார்.

இவ்வழக்கு மீதான விசாரணை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி இடா இஸ்மாயில் முன்னிலையில் இரண்டாவது நாளாக நடைபெற்ற போது அந்த முன்னாள் இளம் வீரர், மேற்கண்டவாறு சாட்சியம் அளித்தார். இவ்வழக்கு வரும் ஏப்ரல் 17 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்