உத்தேசத் சட்டத்திருத்ததை அமைச்சரவை அங்கீகரித்தது

புத்ராஜெயா, மார்ச் 8 –

அந்நிய நாட்டு ஆடவர்களை திருமணம் செய்து கொண்டுள்ள மலேசியப் பெண்களுக்கு வெளிநாடுகளில் பிறக்கும் தங்கள் குழந்தைகளுக்கு மலேசிய குடியுரிமை வழங்குவது தொடர்பான அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான அங்கீகாரத்தை அமைச்சரவை வழங்கியுள்ளது.

இன்று நடைபெற்ற அமைச்சரவைக்கூட்டத்தில் இந்த உத்தேச பரிந்துரை அங்கீரிக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் டத்துக் ஶ்ரீ சைபுடின் னசுதியன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

உள்துறை அமைச்சர் என்ற முறையில் இந்த பரிந்துரையை தாம் முன்வைத்ததாகவும் இதற்கு அமைச்சரவை உறுப்பினர்கள் பச்சைக்கொடி காட்டியுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த பரிந்துரை தொடர்பான நகல் வடிவம், வரைந்தப் பின்னர் இவ்வாண்டில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று அவர் மேலும் கூறினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்