இராமசாமிக்கு எதிரான சிறைத் தண்டனை ரத்து, வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவு

ஷாஹ் அலாம், மே 23-

கோலகுபுபாரு சட்டமன்ற இடைத்தேர்தலின் பிரச்சாரத்தின் போது, தனது வாகனத்தில் பக்காத்தான் ஹராப்பான் கொடியுடன் மாமன்னர் சுல்தான் இப்ராஹிமின் புகைப்படத்தையும் காட்சிக்கு வைத்திருந்த குற்றத்திற்காக ஒரு மாத சிறைத்தண்டனை மற்றும் மூவாயிரம் வெள்ளி அபராதம் விதிக்கப்பட்ட P. இராமசாமிக்கு எதிரான தண்டனையை ஷா அலாம் உயர் நீதிமன்றம் இன்று ரத்து செய்தது.

ஒரு வர்த்தகரான 66 வயது இராமசாமிக்கு எதிரான வழக்கை கோலகுபுபாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என்று உயர்நீதிமன்ற நீதிபதி ஓய் சு கீ உத்தரவிட்டார்.

கோலகுபுபாருவைச் சேர்ந்த இராமசாமிக்கு எதிரான குற்றச்சாட்டு, மாஜிஸ்திரேட் முன்னிலையில் மீண்டும் வாசிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

தனக்கு எதிரான குற்றத்தை ஒப்புக் கொள்வது மூலம், அதனால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை இராமசாமிக்கு புரியாமலேயே அந்த குற்றத்தை அவர் ஒப்புக் கொண்டுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது என்று நீதிபதி சுட்டிக் காட்டியுள்ளார்.

தவிர, இராமசாமியின் இந்த ஒப்புதல் வாக்குமூலம், ஒரு தெளிவற்ற நிலையில் கூறப்பட்டுள்ளது என்பதை வழக்கை விசாரணை செய்த மாஜிஸ்திரேட் புரிந்துக் கொள்ளத் தவறிவிட்டார் என்று நீதிபதி தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்