சண்டையிட்டு கொண்ட எழுவர் கைது செய்யப்பட்டனர்

கோத்தா கினபாலு, மே 23-

கோத்தா கினாபாலுவில் உள்ள ஒரு சந்தைக்கு முன்புறத்தில் சண்டையில் ஈடுபட்டிருப்பதாக நம்பப்படும் ஏழு இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவத்தை தொடர்ந்து, 14க்கும் மேற்பட்ட வயதுடைய அந்நபர்கள் கையும் களவுமாக பிடிக்கப்பட்டிருப்பதாக கோத்தா கினாபாலு மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டன் கோமிஷனர் காசிம் மூசா தெரிவித்தார்.

பகடிவதை, மிரட்டி பணம் பறித்தல் மற்றும் அதிருப்தியின் விளைவாக இச்சம்பவம் நிகழ்ந்திருக்கக்கூடும் என்பதுடன் சந்தேகிக்கும் நபர்கள் குழாய், பிரம்பு ஆகிய பொருட்களை பயன்படுத்தி ஒருவருக்கொருவர் சண்டையிட்டு கொண்டதாக காசிம் மூசா கூறினார்.

தற்போது, இது தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருவதுடன் இச்சம்பவத்தை போலீசார் உறுதிப்படுத்தாத வரையில் இக்காணொளி குறித்து எந்தவொரு ஆருடங்களையும் பரப்ப வேண்டாம் என்று காசிம் மூசா பொதுமக்களை கேட்டுக் கொண்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்