இறக்குமதி செய்யப்படும் பச்ச அரிசியால் மக்கள் குழப்பம்

கோலாலம்பூர், மார்ச் 28-

இறக்குமதி செய்யப்படுகின்ற பச்ச அரிசிகள், சந்தையில் வெவ்வேறான விலைகளில் விற்கப்படுவதால் மக்கள் பெரும் குழப்பத்திற்கு ஆளாகியிருப்பதாக தெரியவந்துள்ளது.

பச்ச அரிசியை இறக்குமதி செய்யும் பெர்னாஸ் நிறுவனம் இதுக்குறித்து மக்களுக்கு உரிய விளக்கத்தை அளிக்க வேண்டுமென தேசிய வாழ்க்கை செலவினம் மீதான நடவடிக்கை மன்றம் நக்கூல்-லின் உணவு பிரிவுக்கான பணிக்குழு தலைவர் டத்தோ சுயேட் அபு ஹஸ்ஸின் ஹாபிஸ் சுயேட் அப்துல் பாசால் கோரிக்கை விடுத்துள்ளார்.

பயனீட்டாளர்கள் என்ற அடிப்படையில், உள்நாட்டு சந்தையில் எத்தகைய இறக்குமதி செய்யப்பட்ட பச்ச அரிசிகள் விற்கப்படுகின்றன என்பதை அறிந்துக்கொள்ளும் உரிமை மலேசியர்களுக்கு இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

ஒரே கிரேட்-ட்டிலான பச்ச அரிசிகள் ஏன் வெவ்வேறு விலைகளில் விற்கப்படுகின்றன என்பது குறித்து யாரிடம் கேட்பது என தெரியாமல் மக்கள் முழிப்பதாக டத்தோ சுயேட் அபு ஹஸ்ஸின் ஹாபிஸ் சுயேட் அப்துல் பாசால் கூறினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்