உள்நாட்டு வருமான வாரியம் வாயிலாக சொத்து விவரங்களை அறிவிக்க வேண்டும்

ஷாஹ் அலாம், மார்ச் 28-

அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவர்களது சொத்து விவரங்களை உள்நாட்டு வருமான வாரியம் – LHDN வாயிலாக அறிவிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

அவர்கள் வழங்குகின்ற சொத்து விவரங்கள் வெளிப்படையானதாகவும் துல்லியமானதாகவும் இருக்க அந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக மலேசிய வடப்பல்கலைக்கழகத்தின் அரசியல் ஆய்வாளர் முஹம்மது அபிபி அப்துல் ரசாக் தெரிவித்தார்.

மலேசியர்களின் சொத்துகள் மற்றும் மூல வருமானங்களைக் கண்டறிவதற்கான முறையை உள்நாட்டு வருமான வாரியம் கொண்டுள்ளது. பாரங்கள் அல்லது காகிதத்தில் வெறுமனே சொத்து விவரங்களை முழுமையில்லாத தகவலுடன் வழங்க செய்யும் அணுகுமுறையை அரசாங்கம் ஏன் பயன்படுத்துகின்றது என்பது புரியவில்லை என்றார் முஹம்மது அபிபி.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் வாயிலாக சொத்து விவரங்களை அறிவிக்க நேரிட்டால் அது எதிர்மறையான தோற்றத்தை ஏற்படுத்தும் சாத்தியம் உள்ளது. அதுவே, உள்நாட்டு வருமான வாரியத்தின் வாயிலாக அறிவித்தால் அத்தகைய தோற்றம் ஏற்படாது. சொத்துக்கள் குறித்த எந்தவொரு தகவலையும் மறைக்க முடியாது என முஹம்மது அபிபி அப்துல் ரசாக் மேலும் கூறினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்