இஸ்லாம் சமயத்தைத் தற்காக்க, பதவிகளை இழக்கவும் தயார்!

கோலாலம்பூர்- மார்ச் 21

அல்லா எனும் சொல் பொறிக்கப்பட்ட காலுறைகளை விற்பனை செய்திருந்த KK Mart கடைகளை புறக்கணிக்க வேண்டும் என தாம் முன்னெடுத்திருந்த விவகாரத்தில், தமது பதவிகளை இழக்க தயாராக இருப்பதாக அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் டாக்டர் அக்மால் சாலே கூறினார்.

தம்முடைய அந்த பிரச்சாரத்திற்கு அரசாங்கத்திலுள்ள டிஏபி உள்ளிட்ட உறுப்புக் கட்சிகளும் அமைச்சர்களும் எதிர்ப்பு தெரிவித்தாலும் தமக்கு கவலையில்லை. மலாய் மற்றும் இஸ்லாமிய சமயத்தைத் தற்காக்கும் அம்னோ-வின் கொள்கைக்கு ஏற்பவே, தாம் அந்த பிரச்சாரத்தை முன்னெடுத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

காலுறை விவகாரத்தில் கோபமடைந்துள்ள மலாய்க்காரர்கள் சம்பந்தப்பட்ட கடையைப் புறக்கணிக்கின்ற பொழுது, சில தரப்பினர்கள் புறக்கணிக்க வேண்டாம் என்று கூறினால், நிச்சயம் அது விளைவை ஏற்படுத்தும் என்றாரவர்.

காலுறை விவகாரத்தை டாக்டர் அக்மால் சாலே பெரிதுபடுத்துவதால், மக்கள் ஆதரவை அம்னோ இழக்குமென டிஏபி-யின் நாடாளுமன்றத்திற்கான தலைவர் ங்கா கொர் மிங் இதற்கு முன்பு கூறியிருந்தார்.

அவ்விவகாரத்தை டாக்டர் அக்மால் சாலே கையாளும் விதம் குறித்து டிஏபி தலைவர் அந்தோனி லோக் உட்பட பலர் அதிருப்தி தெரிவித்திருந்தனர்.

இதனிடடையே, காலுறை விவகாரத்தை,விவேகத்துடன் கையாளும்படி அம்னோ தலைவர் டத்தோ ஶ்ரீ அகமட் ஜாஹித் ஹமிடி, டாக்டர் அக்மால் சாலே -வுக்கு வலியுறுத்திய நிலையில், அவர் அவ்வாறு கூறியுள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்