அல்லா சொல் கொண்ட காலுறை தொழிற்சாலையின் உரிமம் ரத்து

பத்து பஹாத்- மார்ச் 21

அல்லா சொல் கொண்ட காலுறை விவகாரம் பெரும் சர்ச்சையானதை அடுத்து, அதனை விநியோகித்ததாக கூறப்படும் ஜோகூர்-ரிலுள்ள தொழிற்சாலை ஒன்றின் உரிமத்தை பத்து பஹாத் நகராண்மைக் கழகம் ரத்து செய்துள்ளது.

பத்து பஹாத், ஸ்ரீ காடிங் தொழிற்பேட்டையிலுள்ள க்ஸின் ஜியான் சாங் எனும் அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரிடம் அதற்கான நோட்டீஸ் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஜோகூர்-ரில் இஸ்லாத்தின் புனிதம் காக்கப்பட வேண்டுமென அதன் இடைக்கால சுல்தான் துங்கு மக்கோத்தா இஸ்மாய்ல்-லின் உத்தரவுக்கு தாங்கள் முழு ஆதரவை வழங்குவதாகவும் அறிக்கை ஒன்றில் அக்கழகம் கூறியிருந்தது.

நேற்று காலை 11.30 மணியளவில் பத்து பஹாத் இஸ்லாமிய சமயத் துறையினரும் நகராண்மைக் கழகம் உறுப்பினரும் அப்பகுதியிலுள்ள KK சூப்பர்மார்ட் மற்றும் சூப்பர் ஸ்டார் கடைகளில் சோதனைகளை மேற்கொண்டனர்.

ஆயினும், அவற்றில் சர்ச்சைக்குரிய காலுறை ஏதும் கிடைக்கப்பெறவில்லை.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்