உணவகத்தில் நிகழ்ந்த கைகலப்பு, ஐவர் கைது

பெத்தாலிங் ஜெயா,பிப்.6
கோலாலம்பூர், புக்கிட் பிந்தாங்கில் உள்ள ஓர் உணவககத்தின் முன்புறம் கைகலப்பில் ஈடுபட்டு, ரகளைப் புரிந்ததாக நம்பப்படும் ஐந்து ஆடவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கைகலப்பு தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டதைத் தொடர்ந்து 20 க்கும் 30 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த ஐவரும் கைது செய்யப்பட்டதாக டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் நோர் டெல்ஹான் யஹாயா தெரிவித்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் ஓர் அந்நியரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்