உலகின் தலைச்சிறந்த வீராங்கனைகளில் முதல்முறையாக இடம்பெறும் எஸ்.சிவசங்கரி

கோலாலம்பூர், ஏப்ரல் 02 –

நேற்று நடைபெற்ற லண்டன் கிளாசிக் ஸ்குவாஷ் இறுதியாட்டப் போட்டியில் தேசிய ஸ்குவாஷ் வீராங்கனை எஸ்.சிவசங்கரி, உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையான எகிப்தின் ஹனியா எல் ஹம்மாமி-யை வீழ்த்தி, விருதை வென்றார்.

இப்போட்டியில் எஸ்.சிவசங்கரி 11-9, 5-11, 13-11, 12-14, 11-8 எனும் புள்ளிகளில் ஹனியா எல் ஹம்மாமி-யை வீழ்த்தி, மலேசிய மதிப்பில் 83 ஆயிரத்து 141 வெள்ளி ரொக்க தொகையை வென்றார்.

அந்த வெற்றியின் வழி, உலகத் தர வரிசையில் 13ஆவது இடத்தில் இருக்கும் 25 வயது எஸ்.சிவசங்கரி, உலகின் தலைச்சிறந்த 10 வீராங்கனைகளில் ஒருவராக முதல்முறையாக இணையவிருக்கின்றார்.

கடந்த 2015ஆம் ஆண்டில் லண்டன் கிளாசிக் ஸ்குவாஷ் போட்டியின் இறுதியாட்டத்திற்கு, முன்னாள் ஸ்குவாஷ் வீராங்கனை டத்தோ நிகோல் டேவிட் தகுதி பெற்றிருந்த நிலையில், அவருக்கு அடுத்ததாக எஸ்.சிவசங்கரி அந்த சுற்றுக்கு தகுதி பெற்று, சாதனை படைத்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்