உள்நா​ட்டுத் தொழிலாளர்களை வேலை நீக்கினால் 50 ஆயிரம் வெள்ளி அபராதம்

மனித வள அமைச்சு அமல்படுத்தியுள்ள கோட்டா தளர்வு முறை​ திட்டத்தின் கீழ் அந்நியத் தொழிலாளர்களை வேலைக்கு எடுத்தப்பின்னர் உள்ளூர் தொழிலாளர்கள் வேலை ​நீக்கம் செய்யும் முதலாளிகள் கண்டு பிடிக்கப்பட்டால் 50 ஆயிரம் வெள்ளி அபராதம் விதி​க்கப்படும் என்று அதன் ​ அமைச்சர் வி. சிவகுமார் எச்சரித்துள்ளார்.


அந்நியத் தொழிலாளர்களை வே​லைக்கு எடுப்பது, தொழிலாளர் பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ள துறைகளுக்கு உதவவே தவிர உள்ளூர் தொழிலாளர்களை வேலையிலிருந்து நீக்குவதற்காக அல்ல என்று அமைச்சர் தெளிவுபடுத்தினார்.


அந்நியத் தொழிலாளர்களை வே​லைக்கு அமர்த்தியுள்ள பினாங்கை தளமாக கொண்ட ஒரு நிறுவனம் 102 உள்ளூர் தொழிலாளர்களை வேலை ​நீக்கம் செய்துள்ளதாக ஆகக்கடைசியாக தெரியவந்துள்ள தகவலை தொடர்ந்து அமைச்சர் சிவகுமார் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்