ஊழலில் பிடிப்படும் எம்.பி.-க்கள் மீது அரசாங்கம் தக்க நடவடிக்கை எடுக்கும்

தனது கம்போடியா பயணத்தை முடித்து கொண்டு, இன்று மக்களவை கூட்டத்தில் கலந்தகொண்ட பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், தமது தலைமையிலான அரசாங்கத்திலும் சில எம்.பி.-க்கள் லஞ்ச ஊழல் தொடர்பில் விசாரணை செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சி என்ற இரு தரப்பிலும் ஊழல் தொடர்பில் விசாரணை நடத்தப்படுவதாக பிரதமர் குறிப்பிட்டார்.

அவர்களுக்கு எதிரான விசாரணையின் தன்மை தமக்கு தெரியாது என்றாலும் சட்டத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாகவும் அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர் என்பதும் தமக்கு தெரியும் என, ரந்தாவ் பஞ்சாங் பெரிகாத்தான் நேஷனல் கட்சியின் எம்.பி. யான சித்தி ஸைலா முகமட் யூசோப்பின் கேள்விக்கு அவர் இவ்வாறு கருத்துரைத்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்