“என் மகளின் குரலைக் கேட்ட பிரதமருக்கு நன்றி” – 10 வயது மாணவி ஷிவானியின் தந்தை ராஜேஸ்வரன்

சிரம்பான், ஜன – 7,

அடையாள ஆவணம் இல்லாததால் 10 வயது இந்திய மாணவி ஷிவானி பள்ளிக்கூடத்திற்குச் செல்ல முடியாமல் போன விவகாரம் குறித்து அண்மையில் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இவ்விவகாரம் குறித்து ஷிவானியே தமது கைப்பட ஒரு கடிதத்தை எழுதி இருந்தார். அந்தக் கடிதம் நாடளாவிய நிலையில் வைரலானது.

ஹமது மகளின் கடிதம் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் பார்வைக்குச் சென்றுள்ளது எனவும், அதன் விளைவாக ஷிவானி பள்ளிக்கூடத்திற்குச் செல்ல முடிந்தது மகிழ்ச்சியை அளிப்பதாக ஷிவானியின் தந்தையான 44 வயது ராஜேஸ்வரன் குறிப்பிட்டார்.

தமது மகள் அடுத்தத் தவணையின்போது பள்ளிக் கூடத்திற்குச் செல்ல அனுமதிக்கப்பட்டதாக ராஜேஸ்வரன் கூறினார். மேலும், தமது மகளின் அடையாள ஆவண விவகாரத்திலும் உதவி கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டதாக ராஜேஸ்வரன் சொன்னார்.

தமது மகளின் விவகாரத்தில் கல்வி அமைச்சு உடனநடியாக பதில் அளித்திறுப்பது மகிழ்ச்சி எனக் குறிப்பிட்ட அவர், கடந்த ஓராண்டு காலமாக ஷிவானி வள்ளிக்கூடத்திற்குச் செல்லாமல் அவரது உறவினர் வீட்டில் இருந்தே கல்வி கற்று வந்ததாக ராஜேஸ்வரன் குறிப்பிட்டார்.

கல்வியில் அதிக நாட்டம் செலுத்தி வந்த தமது ஒரே மகளான ஷிவானி, தாம் எப்போது பள்ளிக்கூடத்திற்குச் செல்ல முடியும் எனவும் நண்பர்களைப் பார்க்க முடியும் எனவும் அடிக்கடி கேட்டு வந்ததாக ராஜேஸ்வரன் தெரிவித்தார்.

2013 ஆம் ஆண்டு பிறந்த ஷிவானிக்கு குடியுரிமை தகுதி பதிவிலாகாவால் மறுக்கப்பட்டிருந்தது. அதற்கு, தாம் தமது திருமணத்தைப் பதிவு செய்யாமல் விட்டதே காரணம் என வருத்தத்துடன் கூறினார்,

ஆகையால், ஷிவானியின் பிறப்புப் பத்திரத்தில், தாயின் பெயரைக் குறிப்பிட்டிருந்தாலும், ராஜேஸ்வரனின் பெயரைத் தந்தை எனக் குறிப்பிடாமல், தகவல் அளித்தவர் எனக் குறிப்பிடப்பட்டிருந்ததை அவர் சுட்டிக் காட்டினார்.

மருத்துவமனை, அரசாங்கக் கிளினிக் ஆகிய இடங்களில் ஷிபானிக்கு சிகிச்சை வழங்குவது உட்பட பல்வேறு சிக்கல்களைத் தாம் எதிர்கொண்டதாக அவர் சொன்னார்.

இதனிடையே, ஷிவானியின் அடையாள ஆவணம், குடியுரிமை சிகல் தீரும் வரை தம்மால் ஆன உதவியைப் புரிவதாக Pertubuhan Kebajikan Masyarakat Bersatu அமைப்பின் தலைவர் பி. மணிவண்ணன் கூறினார்.

பதிவிலாகாவைத் தாம் சந்தித்து விட்டதாகத் டெரிவித்த மணிவண்ணன், ஷிவானிக்கு வேண்டிய உதவியைப் புரிய தயாராக இருப்பதாகக் கூறியதாக மணிவண்ணன் சொன்னார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்