ஜனவரி 21 அமைதி மறியல்

ரவாங், ஜன – 7,

ரவாங், பத்து அராங் பகுதியில் குப்பைகளை எரியூட்டும் ஆலையைக் கட்டும் திட்டத்தில் மாநில அரசு தீவிரம் கட்டி வருவது வேதனை அளிக்கிறது எனவும் தங்களின் எதிர்ப்பு மதிக்கப்படவில்லை எனவும் உள்ளூர்வாசிகள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

எனவே., தங்களின் எதிர்ப்பை மீண்டும் ஒரு முறை காட்ட வரும் ஜனவரி 21 ஆம் தேதி அமைதி மறியலில் ஈடுபட இருப்பதாக மாநில அரசின் அத்திட்டத்திற்கு எதிர்ப்பைத் தெரிவிக்கும் Rawang Tolak Insinerator செயற்குழு தெரிவித்துள்ளது.

நேரில் சந்திக்க பல முறை அனுமதி கோரியும், சிலாங்கூர் மாநில முதல்வர் டத்தோப் ஶ்ரீ அமிருடின் ஷாரியும், ஊராட்சி மன்ற ஆட்சிக்குழு உறுப்பினர் Ng Suee Limஉம் கண்டு கொள்ளாமல் இருப்பதையும அந்த அமைப்பு சாடியுள்ளது.

தங்களின் எதிர்ப்பு குறித்து அரசாங்கத்திற்குக் காட்டவே இந்த அமைதிப் பேரணி இரண்டாவது முறையாக நடத்தப்படுவதாக அந்த அமைப்பின் பேச்சாளர் Abdul Hanan Abd Mokti கூறினார்.

எதிர்வரும் 21 ஆம் தேதி காலை மணி 8.00 முதல் நண்பகல் மணி 12.00 வரைபண்டார் தாசேக் புத்ரி இரவுச் சந்தை போடப்படும் பகுதியில் இந்த அமைதிப் பேரணி நடத்தப்பட இருப்பதாக அவர் சொன்னார்.

அரசாங்கத்தின் அத்திட்டத்தால் பாதிக்கப்படும் Bandar Tasik Puteri, Kota Puteri, Batu Arang, Coalfields, Saujana, M Residence ஆகிய சுற்று வடாரப் பகுதிகளில் இருந்து மக்கள் வருவார்கள் எனத் தாம் எதிர்ப்பார்ப்பதாக Abdul Hanan குறிப்பிட்டார்.

மேலும், அமைதிப் பேரணியின்போது அமிருடின் ஷாரியும் Ng Suee Limஉம் கட்டாயம் கலந்து கொள்ள தாம் எதிர்ப்பார்ப்பதாகவும் சொன்னார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்