எஸ்.பி.ஆர்.எம் விசாரணை வளையத்திற்குள் முன்னாள் நிதி அமைச்சர் துன் டைம் ஜைனுதீன்

லஞ்ச ஊழல், சட்டவிரோதப் பண மாற்றம் தொடர்பில் நாட்டின் முன்னாள் நிதி அமைச்சரும், துன் மகாதீர் முகமதுவின் நெருங்கிய நண்பருமான துன் டைம் ஜைனுதீன், தற்போது மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம் மின் விசாரணை வளையத்திற்குள் சிக்கியுள்ளார்.

துன் மகாதீரின் ஆட்சிக்காலத்தில் நிதி அமைச்சராக நீண்ட காலம் பதவி வகித்தவரான அம்னோ முன்னாள் பொருளாளருமான டைம் ஜைனுதீன் – னை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தற்போது விசாரணை செய்து வருவதை அந்த ஆணையத்தின் தலைமை ஆணையர் டான் ஸ்ரீ ஆசம் பாக்கி இன்று உறுதி செய்தார்.

கோலாலம்பூர் மாநகரில் பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரத்திற்கு அருகில் உள்ள டாயிம் ஜைனுதீனின் குடும்பத்திற்கு சொந்தமான 270 கோடி வெள்ளி மதிப்புள்ள 60 மாடிகளை கொண்ட MENARA ILHAM கட்டட கோபுரத்தை எஸ்.பி.ஆர்.எம் பறிமுதல் செய்ததைத் தொடர்ந்து அந்த கட்டடத்தை நிர்மாணிப்பதற்கு அந்த முன்னாள் நிதி அமைச்சருக்கு 270 கோடி வெள்ளி எவ்வாறு கிடைத்தது என்பது குறித்து எஸ்.பி.ஆர்.எம் தற்போது விசாரணை செய்யத் தொடங்கியுள்ளது.

ஜைனுதீனின் குடும்பத்திற்கு சொந்தமான அந்த கட்டடத்தை எஸ்.பி.ஆர்.எம் பறிமுதல் செய்தாலும் அந்த கட்டடத்தின் அன்றாட நடவடிக்கைகளில் எந்தவொரு பாதிப்பும் இருக்காது என்றுஆசம் பாக்கி உறுதி அளித்துள்ளார்.

அரசாங்கத்திற்கு சொந்தமான 230 கோடி வெள்ளி முறைகேடு தொடர்பில் டாயிம் ஜைனுதீனையும், டான்ஸ்ரீ அந்தைஸ்தைக் கொண்ட அவரின் வர்த்தக சகாவையும் எஸ்.பி.ஆர்.எம் விசாரணை செய்து வரும் அதேவேளையில் அந்த விசாரணையின் ஒரு பகுதியாக கோலாலம்பூர் மாநகரில் நில அடையாளத்தை தாங்கிய அந்த கட்டட கோபுரம் பறிமுதல் செய்யப்பட்டதாக அறியப்படுகிறது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்