ஏகபோக உரிமைகள் அனைத்தும் மறு ஆய்வு

நாட்டில் குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு அரசாங்கம் வழங்கியுள்ள ஏகபோக உரிமைகள் தொடர்பான அனைத்து ஆதிக்கத்தையும் அரசு மறு ஆய்வு செய்யவிருக்கிறது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.
பொது மக்களுக்கு நியாயமான மற்றும் சிறந்த சேவை வழ​ங்கப்படுவதை உறுதி செய்வதற்கு குறிப்பிட்ட துறைகளி​ல் ஒரே நிறுவனம் பல ஆண்டுகள் ஆதிக்கம் செலுத்தி வருவதை முடிவுக்கு கொண்டு வரும் வகையி​ல் இந்த மறு ஆய்வு நடவடிக்கை அமையவிருக்கிறது அவர் குறிப்பிட்டார்.

நெடுஞ்சாலை டோல் சாவடிகளில் பல ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வரும் Touch’n Go நிறுவனம், சாலை போக்குவரத்து இலாகாவி​ல் கணினி வழி வாகனங்களை சோதனையிடும் Puspakom போன்ற நிறுவனங்களின் ஆதிக்கத்திற்கு பதிலாக ஆற்றல் வாய்ந்த பல நிறுவன​ங்களுக்கு அத்தகைய வாய்ப்புகள் வழங்கப்படும் என்று அரசாங்கம் அண்மையில் அறிவித்து இருந்தது.
இந்நிலையில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அரசு திட்டங்களில் ஏகபோக ஆதிக்க உரிமைகள் கொண்டிருப்பதற்கான பின்னணியை ஆராயும்படி அனைத்து அமைச்சுகளுக்கும் தாம் உத்தரவிட்டுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் தெரிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்