ஏழு இடங்களில் ஜூன் 5 முதல் 7 வரை நீர் விநியோக தடை

கிள்ளான், மே 14-

கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதிகளான கோலாலம்பூர், கோம்பாக், ஹுலு சிலாங்கூர், கிள்ளான், கோலா சிலாங்கூர், பெட்டாலிங் ஜெயா உட்பட ஷா அலாம் ஆகிய ஏழு இடங்களில் வருகின்ற ஜூன் 5 ஆம் தேதி தொடங்கி ஜூன் 7 ஆம் தேதி வரையில் நீர் விநியோக தடை ஏற்படவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுங்கை சிலாங்கூர் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதற்கட்ட பாகங்கள் மாற்றியமைக்கும் நடவடிக்கைகள் மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக இந்த நீர் விநியோக தடை ஏற்படவிருப்பதாக ஆயிர் சிலாங்கூர் நேற்று முகநூல் அகப்பக்கத்தில் தெரிவித்துள்ளது.

பராமரிப்பு பணிகள் அனைத்தும் நிறைவடைந்த பிறகு, ஜூன் 6 ஆம் தேதி அதிகாலை 3 மணி முதல் பயனர்களுக்கு நீர் விநியோகம் கட்டம் கட்டமாக கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுவதாக அது குறிப்பிட்டிருந்தது.

பாதிக்கப்பட்ட இடங்களில் ஜூன் 7 ஆம் தேதி பிற்பகல் 12 மணியளவில் நீர் முழுமையாக பயனர்களுக்கு கிடைக்க பெறும் என்று நம்புவதாக ஆயிர் சிலாங்கூர் கூறியுள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்