அரசு ஊழியரை காயப்படுத்தியதாக நண்டு வியாபாரிக்கு அபராதம்

பினாங்கு , மே 14-

பினாங்கு மாநகர் மன்றத்தின் அமலாக்க அதிகாரியின் பணிகளுக்கு இடையூறு விளைவித்து, காயம் ஏற்படுத்தியதாக நண்டு வியாபாரி ஒருவர் ஜார்ஜ்டவுன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றச்சாட்டப்பட்டார்.

23 வயது முஹம்மது ரிட்ஜுவான் அல்-ஹஃபிட்ஸ் முகம்மது அலமிருல் முபென் என்ற அந்த நண்டு வியாபாரி மஜிஸ்ட்ரெட் சித்தி நூருல் சுஹைலா பஹாரின் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது அக்குற்றத்தை அவர் ஒப்புக் கொண்டார்.

தம்முடைய வணிக பொருட்களை பறிமுதல் செய்ததற்காக சம்பந்தப்பட்ட அரசு ஊழியரை பணியின் போது தொந்தரவு செய்ததாகவும் வேண்டுமென்றே அந்த அரசு ஊழியருக்கு காயம் விளைவித்ததாகவும் இரண்டு குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.

இதுக்குறித்து, குற்றவியல் சட்டம் 323 பிரிவின் கீழ் அந்நபர் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது. முதல் குற்றச்சாட்டிற்கு 3,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபராதம் செலுத்த தவறினால் ஆறு மாதம் சிறைத்தண்டனை விதிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இரண்டாம் குற்றச்சாட்டிற்கு, 1,500 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டிருப்பதுடன் அபராதம் செலுத்த தவறினால் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்க மஜிஸ்ட்ரெட் சித்தி நூருல் ஆணையிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்