ஒப்பந்ததாரருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

குவாந்தான், ஜாலான் தெலுக் சிசெக் கில் பாதாள சாக்கடை குழாய் திட்டத்தை செயல்படுத்தப்பட்டதன் விளைவாக ஏற்பட்டிருக்கும் சாலை நெரிசல் பிரச்னை அடுத்த மாதம் ஏப்ரல் குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இத்திட்டத்தை ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் முடிக்குமாறு ஜாலுர் சஹாயா சென்டிரியான் பெர்ஹாட் வின் ஒப்பந்ததாரருக்கு பகாங் அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளதாக பகாங், நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் மனிதவளக் குழுவின் தலைவர் சிம் சோன் சியாங் தெரிவித்தார்.

தற்போது இத்திட்டத்தை குறித்து செயல்பாடுகள் தாமதமாக நகர்வது மாநில அரசு கூட்டத்தின் கவனத்திற்கு வந்ததாகவும் குறிப்பிடப்பட்ட நடவடிக்கையின் நிலையை குறித்து தகவல்களை வழங்க ஒப்பந்ததாரரை கேட்டுக் கொள்ளப்படுவதாக சிம் சோன் சியாங் கூறினார்.

இவை ஜாலான் தெலுக் சிசெக் பகுதியில் உள்ள சாலை நெரிசலை தடுப்பதுடன் வாகனங்களை குறிப்பிடப்பட்ட பார்க்கிங் சிக்கலைத் தீர்க்கும் என்று சிம் சோன் சியாங் விளக்கினார்.

சம்பந்தப்பட்ட இடங்களை சுற்றிலும் சாலையைப் பயன்படுத்துபவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன் போக்குவரத்து அதிகாரிகளை அவ்விடத்தில் பணிக்கு அமர்த்துமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக சிம் சோன் சியாங் அறிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்