யாங் டி-பெர்துவான் அகோங் உதவித்தொகை விண்ணப்பித்தல் நேற்று முதல் தொடக்கம்

புத்ராஜெயா, மார்ச் 5 –

2024 ஆம் ஆண்டிற்கான யாங் டி பெர்துவான் அகோங் உதவித்தொகை விண்ணப்பிக்க தகுதிப்பெற்ற மலேசிய குடியிருப்பாளர்கள் நேற்று திங்கட்கிழமை தொடங்கி மார்ச் 29 ஆம் தேதி வரையில் பொது சேவை துறையின் ஜெ.பி.ஏ கீழ் விண்ணப்பம் செய்யலாம்.

உள்ளூர் உயர்கல்வி நிறுவனங்கள் அல்லது உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களில் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்பு மேற்கொண்டிருக்கும் குறிப்பிடப்பட்ட துறைகளான அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம், சட்டம், இஸ்லாமிய நிதி மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றிற்கு அரசாங்கத்தின் இந்த உதவித்தொகை வழங்கப்படும் என்று ஜெ.பி.ஏ நேற்று ஓர் அறிக்கையில் வெளியிட்டிருந்தது.

விண்ணப்பத்தாரர்கள் மார்ச் 4 முதல் மார்ச் 29 ஆம் தேதி வரையில் https://bmipenajaan.jpa.gov.my என்கிற இணையத்தளத்தின் வாயிலாக பாரத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம் என்று ஜெ.பி.ஏ நினைவுறுத்தியது.

விண்ணப்பம் செய்யப்பட்ட பாரத்துடன் தொடர்புடைய துணை ஆவணங்கள் ஏப்ரல் 5 ஆம் தேதிக்குள் நேரில் வந்தோ அல்லது தபால் மூலம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று ஜெ.பி.ஏ வலியுறுத்தியது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்