ஒருநாளைக்கு 9 லட்சத்திற்கும் மேலான பயணிகள் எதிர்பார்க்கப்படுகின்றனர்

சுபாங் ஜெயா, பிப்ரவரி 29 –

தேசிய இரயில் சேவை, ரேபிட் இரயில் ஆகிய பொதுபோக்குவரத்து சேவைகளை பயன்படுத்துவோர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது மட்டுமல்லாமல் 40 சதவீத பயணிகள் இச்சேவையை பயன்படுத்தி பயணம் செய்வார்கள் என்று அரசாங்கம் எதிர்பார்க்கின்றனர்.

2024 ஆம் ஆண்டில், ஒரு நாளைக்கு 900,000 க்கும் மேற்பட்ட பயணிகள் இரயில் சேவைகளை பயன்படுத்தி பயணிக்க வேண்டும் என்பதை இலக்காக கொண்டு செயல்படுவதாக ரேபிட் ரயில் ஸென்டிரியான் பெர்ஹாட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அமிர் ஹம்டான் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு முழுவதும் ல்.ர்.டி, ம்.ர்.டி, மொனொரெல் ஆகிய இரயில் சேவைகளை பயன்படுத்தி செல்லும் பயனோர்களின் எண்ணிக்கை 741,259 என்று அமிர் ஹம்டான் கூறினார்.

அரசாங்கம் மற்றும் ரேபிட் இரயில் நிர்வணங்கள் ஆகியவை மேற்கொண்ட மாற்றங்களினாலும் முன்முயற்சிகளினாலும் இவ்வாண்டு ஒரு நாளைக்கு 904,000 பயணிகள் பொதுபோக்குவரத்தை பயன்படுத்துவார்கள் என்று நம்பப்படுவதாக அமிர் ஹம்டான் விளக்கினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்