யு.பி.யு ஒன்லைன் விண்ணப்பம் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது

கோலாலம்பூர், பிப்ரவரி 29 –

2024/2025 ஆம் ஆண்டிற்கான சான்றிதழ், டிப்ளமோ, இளங்கலை ஆகிய மாணவர்களின் மேற்கல்வி நுழைவிற்கான யு.பி.யு ஒன்லைன் விண்ணப்பங்கள் இன்று வியாழக்கிழமை முதல் மார்ச் 29 ஆம் தேதி வரையில் முதல் கட்ட விண்ணப்பமும் ஏப்ரல் 29 முதல் ஜூன் 9 ஆம் தேதி வரையில் இரண்டாம் கட்ட விண்ணப்பமும் திறக்கப்பட்டுள்ளது.

20 பொதுப் பல்கலைக்கழகங்கள், 36 போலிதெக்னிக் , 105 கோலெஜ் கொமுனிதி உட்பட 4 பொது உயர்திறன் பெற்ற நிறுவனங்கள் ஐ.ல்.கெ.ஏ போன்ற நுழைவிற்கான விண்ணப்பங்கள் தற்போது திறக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வி அமைச்சகம் ஓர் அறிக்கையில் வெளியிட்டுள்ளது.

தகுதிப்பெற்ற அனைத்து மாணவர்களும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொண்டு மேற்கல்வியை தொடர வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாக உயர்கல்வி அமைச்சகம் கேட்டுக் கொண்டது.

பேங்க் சிம்பானான் னேசியோனல் பி.ஸ்.ண் வங்கிற்கு சென்று அல்லது மை பி.ஸ்.ன் இணையத்தளத்தின் வாயிலாக விண்ணப்பத்தாரர்கள் யு.பி.யு ஒன்லைன் எண்களை பெற்று கொள்ளலாம் என்று கெ.பி.தி தெரிவித்துள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்