ஒரு கண் இஸ்தானா நெகாராவில், மறு கண் ஜோகூரில் !

 

எனது ஒரு கண்ணையும் ஒரு காதையும் ஜோகூரில் வைத்து விட்டுதான் இஸ்தானா நெகாராவுக்கு வந்துள்ளேன். நான் எப்போது வேண்டுமனாலும் ஜோகூரின் எந்த மாவட்டத்திற்கும் வருவேன், என்னை திடீரென அங்கு பார்க்கலாம் என நாட்டின் 17 வது மாமன்னராகப் பொறுப்பேற்றிருக்கும் சுல்தான் இப்ராஹிம் ஜோகூர் மக்களுக்குக் கூறியதாகும்.

 

இதனை தனது இண்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்த காணொலியில் மாமன்னர் குறிப்பிட்டார். தம் அடிக்கடி ஜோகூருக்கு வருவார் என அம்மாநில மக்களுக்கு அவர் நினைவுபடுத்தினார்.

தாம் தற்போது ஜோகூரில் இல்லாததால் தம்மை ஜோகூர்வாசிகள் மறந்து விட வேண்டாம் எனவும் சொன்னார்.

மாமன்னர் ஆவது ஒரு பதவி உயர்வு அல்ல. அது கூடுதல் கடமையாகும். தாம் மற்ற மலாய் ஆட்சியாளர்களின் பிரதிநிதி எனக் குறிப்பிட்ட அவர். . கடினமான பொறுப்பான மாமன்னராக இருந்து மக்களின் நலனையே முதன்மையாகக் கொண்டு செயல்படுவதாக அந்தக் காணொலியின் சுல்தான் இப்ராஹிம் கூறினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்