நஜீப்பின் பொது மன்னிப்பு : அன்வாரின் நிலைப்பாடு என்ன என்பது மக்களுக்குத் தெரிய வேண்டும் – முக்ரிஸ் மகாதீர் கேள்வி

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கின் பொது மன்னிப்பு விவகாரத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என்று Parti Pejuang Tanahair கட்சி  கோரியது.

நஜிப்புக்குக் கொடுக்க இருக்கும் பொது மன்னிப்பானது, முறைகேடுகள், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஊழல் காரணமாக 2018 இல் நஜிப் தலைமையிலான பாரிசான் நேஷனல் அரசாங்கத்தை கவிழ்க்க உறுதியாக இருந்த மில்லியன் கணக்கான மலேசியர்களை ஏமாற்றமடையச் செய்தது என சிங்கப்பூர் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டதாக பெஜுவாங் கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ முக்ரிஸ் மகாதீர் கூறினார்.

எனவே, நஜிப்பின் பொது மன்னிப்பு குறித்து பிரதமர் அன்வார் இப்ராஹிம்மின் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன வென்றும் இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பும் உரிமை இந்த அரசாங்கத்திற்கு உண்டு என முக்ரீஸ் குறிப்பிட்டார்.

விசாரணையின் போது, ​​நஜிப் ஒரு தனது குற்றத்தை ஒப்புக் கொண்டதாகத் தெரியவில்லை. மேலும் அவரின் குற்றத்தால் மலேசிய மக்கள் பல சுமையை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. அதன் பொருட்டு அவர் மலேசிய மக்களிடம் மன்னிப்பும் கேட்கவில்லை என முக்ரிஸ் கூறினார்

சில ஊடகங்களில் கூறப்படுவது போல், பொது மன்னிப்பின் காரணமாக நஜிப்பின் தண்டனை வீட்டுக் காவலாக மாற்றப்பட்டால் மலேசிய சட்டத்துறையைப் பார்த்து உலகமே சிரிக்கும் என முக்ரீஸ் தெரிவித்தார்.

 

 

 

 

 

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்