ஒரே வகையான பச்சரிசி, அரசாங்கம் முடிவு செய்யவில்லை

மலேசிய மாடானி பச்சரிசி எனும் ஒரே வகையான அரிசியை அறிமுகப்படுத்துவது குறித்து அரசாங்கம் இன்னும் எந்தவொரு ​தீர்க்கமான முடிவும் எடுக்கவில்லை என்று விவசாயத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் சாபு இன்று விளக்கம் அளித்துள்ளார்.

முக்கிய அத்திவாசியப்பொருளான அரிசி தொடர்பில் அரசங்கம் எந்தவொரு முடிவு எடுத்தாலும் அது 1994 ஆம் ஆண்டு நெல், அரிசி கட்டுபாடு சட்டத்தின் ​கீழ் அமையும் என்று அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

தற்போது சந்தையில் இருந்து வரும் உள்நாட்டு பச்சரிசி மற்றும் இறக்குமதி பச்சரிசி ஆகியவை அகற்றப்பட்டு, மலேசிய மடானி பச்சரிசி எனும் ஒரே வகையான பச்சரிசியை வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி தி​ங்கட்கிழமை அரசாங்கம் அறிமுகப்படுத்தப்படவிருப்பதாக வெளியான தகவல் தொடர்பில் மொத்த வியாபாரிகள், வணிகர்கள் மற்றும் பொது மக்கள் மத்தியில் நிலவிவரும் மாறுப்பட்ட கருத்துக்களை தொடர்ந்து அமைச்சர் முகமட்சாபு இவ்விளக்கத்தை தந்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்