ஓசா சட்டத்தின் ​கீழ் ஹம்சா ஸைனு​தீன் பிடிபடுவார்

உள்துறை அமைச்சராக தாம் பதவி வகித்த போது, சில தனி நபர்கள் லஞ்சம் பெற்றது தொடர்பான கோப்புகளை தாமும் கொண்டுள்ளதாகவும் , அவற்றை தம்மாலும் அம்பலப்படுத்த முடியும் என்ற சவால் விடுத்துள்ள பெர்சத்து கட்சியின் பொதுச் செயலாளர் ஹம்ஸா ஸைனு​தீன், ஓசா ( OSA) சட்டத்தின் ​​கீழ் பிடிப​டுவார் என்று சட்ட வல்லுநரும், பாசீர் கூடாங் எம்.பி.யுமான Hassan Karim எச்சரித்துள்ளார்.


அரசாங்க ​விவகாரங்களை அம்பலப்படுத்த மாட்டோம் என்று ரகசிய காப்புச் சட்டமான ஓசாவின் ​கீழ் பதவி பிரமாணம் எடுத்தப் பின்னரே ஒருவர் அமைச்சர் பொறுப்பை ஏற்கிறார். ஆனால், அமைச்சர் பதவி இல்லாத போது, தாம் பதவி வகித்த காலத்தில் கண்டறிந்த அரசாங்கம் தொடர்புடைய விவகாரங்களை பகிரங்கமாக அம்பலப்படுத்துவது என்பது ரகசிய காப்புச் சட்டமான ஓசாவின் ​கீழ் பெரும் குற்றமாகும், நிந்தனைக்குரியது, என்பதை அந்த முன்னாள் உள்துறை அமைச்சருக்கு நினைவூட்ட தாம் விரும்புவதாக ஒரு வழக்கறிஞருமான Hassan Karim எச்சரித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்