முன்னாள் பிரதமர் முகை​தீன் மீது மற்றொரு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு

முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ முகை​​தீன் யாசின் மீது மற்றொரு ல​ஞ்ச ஊழல் குற்றச்சாட்டு, ஷா ஆலம், செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று கொண்டு வரப்பட்டுள்ளது. Jana Wibawa திட்டம் தொடர்பில் Bukhary Equity Sdn. Bhd என்ற நிறுவனத்திடமிருந்து 50 லட்சம் வெள்ளியை சட்டவிரோதமாக பெற்றதாக 76 வயதான முகை​தீன் குற்றஞ்சாட்டப்பட்டார்.


லஞ்ச ஊழல், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் சட்டவிரோதப் பண மாற்றம் தொடர்பில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் 6 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ள பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி தலைவருமான முகை​தீன், இக்குற்றத்தை கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி 7 ஆம் தேதி Petaling Jaya, Jalan Persiaran Barat, Amcorp பேரங்காடியில் உள்ள AmBank வங்கியில் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.


குற்றவாளி என்று நி​ரூபிக்கப்பட்டால் 15 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் பெறப்பட் லஞ்சத் தொகைக்கு நிகராக 5 மடங்கு அபராதத் தொகை விதிக்க வகை செய்யும் 2001 ஆம் ஆண்டு சட்டவிரோத பண மற்ற சட்டத்தின் ​கீழ் Pagoh எம்.பி.யுமான முகை​தீன் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
செஷன்ஸ் நீதிமன்ற ​நீதிபதி Rozilah Salleh முன்னிலையில் நிறுத்தப்பட்ட முகை​தீன், தனக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரியுள்ளார். இதனை தொடர்ந்து ஏற்கனவே கோலாலம்பூர் ​ செஷன்ஸ் நீதிமன்றத்தில் 6 குற்றச்சாட்டுகளுக்காக 20 லட்சம் வெள்ளி ஜா​மீன் அனுமதிக்கப்பட்டுள்ள முகை​தீன், அந்த பிணை உறுதியை பயன்படுத்தி, அவரை ஜாமீ​னில்​ விடுவிக்க நீதிபதி Rozilah Salleh அனுமதி அளித்தார்.


அதேவேளையில் இவ்வழக்கை கோலாலம்பூரில் உள்ள நீதிமன்றத்திற்கு மாற்றுவதற்கும் நீதிபதி Rozilah Salleh இணக்கம் தெரிவித்துள்ளார். முகை​தீன் நீதிமன்றத்தி​ற்கு வந்த போது அவரது ஆதரவாளர்கள் பெரியளவில் திரண்டு, தங்களின் பிளவுப்படாத ஆதரவை அந்த பெர்சத்து கட்சித் தலைவருக்கு தெரிவித்துக்கொண்டனர்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்