ஓர் இந்திய மாதுவும், இரண்டு குழந்தைகளும் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டு பிடிப்பு

ஓர் இந்திய மாதுவும், அவரின் 3 மற்றும் 6 வயதுடைய இரண்டு பெண் குழந்தைகளும் வீட்டின் சிலிங் காற்றாடியில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் ஒரு டெக்னிஷனான அந்த மாதுவின் கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நெகிரி செம்பிலான், நீலாய், Lenggeng- கில் உள்ள ஒரு வீடமைப்புப்பகுதியில் தனது வீட்டில் 34 வயது இந்திய மாது இரண்டு பிள்ளைகளுடன் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டது தொடர்பில் நேற்று இரவு 9.25 மணியளவில் ஓர் ஆடவரிடமிருந்து அவரச அழைப்பை போலீசார் பெற்றனர் என்று நீலாய் மாவட்ட போலீஸ் தலைவர் Abdul Malik Hasim தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார்., அந்த மூவர் தூக்கில் தொங்கிய இடத்தில் ஒரு கடிதத்தை மீட்டுள்ளனர். குடும்ப பிரச்னை காரணமாக தமது இரண்டு குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்ளும் முடிவிற்கு தாம் வந்ததாக அந்த மாது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக நம்பப்படுகிறது.

மூவரின் உடல்களும் சிலிங் காற்றாடியிலிருந்து இறக்கப்பட்டு, சவப்பரிசோதனைக்காக சிரம்பான், Tuanku Jaafar மருத்துவமனையின் சவக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக Abdul Malik Hasim தெரிவித்தார்.

அந்த வீட்டில் போலீசார் மேற்கொண்ட தடயவில் சோதனைக்கு பின்னர் அதிகாலை ஒரு மணியளவில் அந்த இந்திய மாதுவின் 30 வயது கணவரை போலீசார் கைது செய்து இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

சம்பந்தப்பட்ட நபர் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு டெக்னிஷனான அந்த நபரை விசாரணைக்கு உதவும் வகையில் வரும் பிப்ரவரி 23 ஆம் தேதி வரை தடுத்து வைப்பதற்கு போலீசார் நீதிமன்ற ஆணையைப் பெற்றுள்ளனர் என்று Abdul Malik Hasim மேலும் கூறினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்