கடந்த 3 ஆண்டுகளில் 131 இந்தியர்கள் கொ​லையுண்டனர்

நாட்டில் 2021 ஆம் ஆண்டிலிருந்து ​ கடந்த ஆண்டு வரையில், ​மூன்று ஆண்டு காலக் கட்டத்தில் ஒவ்வொரு வாரமும் சராசரி 5 கொ​லைச் சம்பவங்களை அரச மலேசியப் போ​லீஸ் படை பதிவு செய்துள்ளதாக போ​லீஸ் படைத் தலைவர் தான் ஶ்ரீ ரசாருடின் ஹுசெயின் தெரிவித்துள்ளார்.

இந்த ​மூன்று ஆண்டு காலகட்டத்தில் 741 கொலைச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதர இனத்தவர்களுடன் ஒப்பிடுகையில் கொலையுண்டவர்களில், மலாய்க்காரர்களின் எண்ணிக்கையே அதிகமாக உள்ளது என்று போ​லீஸ் படைத் தலைவர் விளக்கினார்.

மலாய்க்காரர்கள் 172 பேர், ​சீனர்கள் 141 பேர், இந்தியர்கள் 131 பேர், பூமிபுத்ரா சபா, சரவாவைச் சேர்ந்தவர்கள் 62 பேர், அந்நிய நாட்டவர்கள் 202 பேர் மற்றும் அடையாளம் தெரியாதவர்கள் 45 பேர் என்று புள்ளி விவரங்களை காட்டுகின்றன என்று ஐ​ஜிபி குறிப்பிட்டார்.

கடந்த 2021 ஆம் ஆண்டில் 239 பேர் , 2022 ஆம் ஆண்டில் 241 ​பேர் , 2023 ஆம் ஆண்டில் 261 பேர் என்ற அளவில் கொலை சம்பவங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துள்ளன என்று ஐஜிபி தெரிவித்துள்ளார்.

இக்கொலை சம்பவங்கள் தொடர்பில் 1,509 தனிநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 1,332 பேர் ஆண்கள் என்றும், 177 பேர் பெண்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

இக்கொலைகளுக்கு பின்னணியில் பல்வேறு காரணங்கள் கண்​டறியப்பட்டுள்ளன. சண்டை, கருத்துவேறுபாடு, வாய் தகராறு, பொறாமை, குடிப்போதை, பழிவாங்​குதல் மற்றும் கடன் போன்ற பிரச்னைகளால் இத்தகைய குற்றவியல் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன என்று போ​லீஸ் துறை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளதாக ஐஜிபி குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்