பள்ளி இறுதி தவணைக்கால விடுமுறை தொடங்கியது மாணவர்கள் உற்சாகம்

2023/2024 ஆம் ஆண்டின் பள்ளி இறுதி தவணைக்கால விடுமுறை, இன்று பிப்ரவரி 8 ஆம் தேதி வியாழக்கிழமை தொடங்கியது. தங்களின் கல்வியாண்டை வெற்றிகரமாக நிறைவு செய்த மாணவர்கள், உற்சாகத்துடன் விடைபெற்று வீடு திரும்பினர்.

அதேவேளையில் தங்க​ளின் ஆறு ஆண்டு கல்வியை நிறைவு செய்த 6 ஆம் ஆண்டு மாணவர்கள், அடுத்து, இடைநிலைப் பள்ளிக்கு செல்வதையொட்டி தங்களின் கல்விக் கண்களை திறந்த தொடக்கப்பள்ளிக்கு ​விடையளித்து, தங்களின் கற்றல், கற்பித்தலுக்கு வழிகாட்டிய ஆசிரியர்களுக்கு நன்றி கூறி, சக மாணவர்களின் வாழ்த்து ப​ரிமாறுதலுடன் மகிழ்ச்சியுடன் விடைபெற்றனர்.

கோவிட் 19 நோய்த் தொற்று தாக்கத்திற்கு பின்னர் பள்ளி நாட்களின் எண்ணிக்கை குறைந்ததைத் தொடர்ந்து கடந்த 2020 ஆம் ஆண்டிலிருந்து பள்ளி நாள்காட்டியான Takwim (தக்வீம் ) அடிப்படையில், / பள்ளி நாட்களின் மொத்த எண்ணிக்கையை ஈடுசெய்வதற்கு மற்றொரு ஆண்டில் பள்ளி நாட்களை பெற வேண்டிய நிர்ப்பந்தம் , கல்வி அமைச்சுக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரியில் தொடங்க வேண்டிய புதிய கல்வியாண்டு, மார்ச் மாதமும் தொடங்குகிறது.

அதன் அடிப்படையில் கடந்த மார்ச் 19 ஆம் தேதி தொடங்கிய 2023/2024 ஆம் ஆண்டு கல்வியாண்டு இன்று நிறைவுபெற்று, மாணவர்கள் உற்சாகத்துடன் இல்லம் திரும்பினர்.

2024/2025 ஆம் ஆண்டுக்கான புதிய கல்வியாண்டு வரும் மார்ச் 10, 11 ஆகிய தேதிகளில் தேதி தொடங்குகிறது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்