கடப்பிதழை மீண்டும் பெற்றார் முகைதீன் யாசின்

பெத்தாலிங் ஜெயா,பிப்.8
அடுத்த வாரம் பேங்காக்கிற்கு செல்வதற்காக முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ முகைதீன் யாசினிடம் கடப்பிதழை தற்காலிகமாக திரும்ப ஒப்படைப்பற்கு கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று அனுமதி அளித்தது.

முகைதீன் யாசினின் அந்த வெளிநாட்டுப் பயணம், அவசரத்தேவையின் அடிப்படையில்லை என்ற போதிலும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு கடப்பிதழை திரும்ப ஒப்படைப்பதற்கு அனுமதிப்பதாக நீதிபதி அசுரா அல்வி தெரிவித்தார்.

குடும்ப விடுமுறைக்காக லண்டனுக்குச் செல்வதற்கும், சிங்கப்பூரில் மருத்துவரை சென்று பார்ப்பதற்கும், தனது கடப்பிதழை திரும்ப பெறுவதற்கு நீதிமன்றம் இதற்கு முன்பு முகைதீனுக்கு அனுமதி அளித்தது.

ஆனால், இந்த முறை தனக்கு மிக நெருக்கமானவவர் தாய்லாந்தில் ஓர் உணவகத்தை திறப்பதால் தம்மையும் அழைத்துள்ளார் என்றும் அதற்கு அவசியம் செல்ல வேண்டிய நிர்பந்தம் தமக்கு இருப்பதாக முகைதீன் தனது அப்பிடேவிட் மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்