கடைசி வரையில் அது பூமிபுத்ரா பல்கலைக்கழகமாகும்

கோலாலம்பூர், மே 17-

UiTM எனப்படும் மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் இருதய சிகிச்சைக்கான மேற்கல்வியை தொடர்வதற்கு பூமிபுத்ரா அல்லாத மாணவர்களை அனுமதிக்கும் உத்தேசத் திட்டத்தை அம்னோ இளைஞர் பிரிவு முழு வீச்சில் எதிர்க்கும் என்று அதன் தலைவர் டாக்டர் அக்மால் சாலேஹ் தெரிவித்துள்ளார்.

மாரா தொழில்நுட்பக்கழகம் முழுக்க முழுக்க பூமிபுத்ராக்களுக்கு சொந்தமானதாகும் என்று அதன் சட்டத்திலேயே உள்ளது. இப்போது மட்டுமல்ல, கடைசி வரையில் அது பூமிபுத்ரா மாணவர்கள் உயர்க்கல்வி பயில்வதற்கான பல்கலைக்கழகமாகவே அது இருக்கும், இருக்க வேண்டும் என்று அக்மால் சாலேஹ் குறிப்பிட்டார்.

பூமிபுத்ரா மருத்துவர்களுக்கு மட்டுமே அங்கு இடம் கிடைக்கும் என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்