6 ஏக்கர் நிலம் குறித்து விளக்கமளிப்புக்கூட்டம்

சிலாங்கூர், மே 17-

நாட்டில் வரலாற்று சிறப்புமிக்க சுங்கை பூலோ ஆர். ஆர். ஐ. ( R.R.I ) தமிழ்ப்ள்ளிக்கு நீண்ட காலப் போராட்டத்திற்கு பிறகு பள்ளியை இடம் மாற்றம் செய்வதற்கு 6 ஏக்கர் நிலம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

தற்போது பள்ளி வீற்றிருக்கும் இடத்திலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் வியூகம் நிறைந்த இடத்தில் இந்த ஆறு ஏக்கர் நிலம் கிடைத்துள்ளது.

பெத்தாலிங் உத்தாமா மாவட்டத்திற்கு உட்பட்ட 5 தமிழ்ப்பள்ளிகளில் ஒன்றாக விளங்கும் சுங்கை பூலோ ஆர். ஆர். ஐ. ( R.R.I ) தமிழ்ப்பள்ளியில் கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகளுக்கு அடிப்படை வசதிகளுடன் பொருத்தமான இடத்தில் கிடைக்கப்பெற்ற இந்த 6 ஏக்கர் நிலம் குறித்து ஒரு விரிவான விளக்கமளிப்புக்கூட்டம் வரும் மே 19 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை மணி 4.00- க்கு சுங்கை பூலோ R.R.I, டேவான் ஆடிட்டோரியம் LGM- மில் நடைபெறவிருக்கிறது.

இந்த விளக்கமளிப்புக்கூட்டத்தில் தமிழ் அறவாரியத்தின் துணைத் தலைவரும், மலேசிய தமிழ்ப்பள்ளி மேலாளர் வாரியக் கூட்டமைப்பின் செயலாளருமான சுப்பிரமணியன் ராகவன் கலந்து கொண்டு விளக்கம் அளிக்கவிருக்கிறார் என்று இந்த விளக்கமளிப்புக்கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ள R.R.I. ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய நிர்வாகத்தின் விளக்கமளிப்புக்கூட்ட ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் லெட்சுமணன் தெரிவித்துள்ளார்.

பள்ளிக்கு கிடைக்கப்பெற்ற 6 ஏக்கர் நிலத்தை தற்காத்துக்கொள்ளவும், உண்மை நிலவரத்தை அறிந்து கொள்ளவும் இந்த விளக்கமளிப்புக் கூட்டத்தில் பள்ளி பெற்றோர்களும், R.R.I. தோட்ட மக்களும், முன்னாள் மாணவர்களும் திரளாக கலந்து கொண்டு, உரிய தெளிவுரையை பெறுமாறு தியாகராஜன் லெட்சுமணன் அழைப்பு விடுத்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்