கண்ணதாசனின் மரணம் ஒரு தற்கொலையே

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தீ விபத்தில் உயிரிழந்த கண்ணதாசன் வீராசாமியின் மரணம் ஒரு தற்கொலையே என்று ஷா ஆலம், மரண விசாரணை நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்தது.

கண்ணதாசனின் மரணத்தில் மற்றவர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பதற்கு தடயங்கள் எதுவும் இல்லை என்று மரண விசாரணைக்கு தலைமையேற்ற நீதிபதி Rasyihah Ghazali தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

பட்டறை ஒன்றின் மேற்பார்வையாளரான 34 வயது கண்ணதாசன் கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் தேதி புக்கிட் பூச்சோங்கில் கார் செர்விஸ் செண்டரில் நிகழ்ந்த தீ விபத்தில் மரணம் அடைந்தார். அவரின் மரணத்தில் சூது இருப்பதாக அவரின் குடும்பத்தினர் புகார் அளித்ததைத் தொடர்ந்து நடைபெற்ற மரண விசாரணையில் கண்ணதாசன் பணப் பிரச்னையில் சிக்கியிருப்பது தெரியவந்துள்ளது என்று நீதிபதி ரசிஹா கஸாலி குறிப்பிட்டார்.

2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கண்ணதாசன் தனது முதலாளியிடமிருந்து 57 ஆயிரம் வெள்ளியை தவறாக பயன்படுத்தியுள்ளார். ஒரு மாதத்திற்குள் பணத்தை திருப்பி தந்து விடுவதாக சாட்சியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், உறுதி அளித்ததைத் போல் அவரால் பணத்தை திருப்பி கொடுக்க முடியவில்லை என்பது தெரிவித்துள்ளது.

மற்றொரு நபரிடம் 19 ஆயிரம் வெள்ளி கடம் பெற்றுள்ளார். கண்ணதாசன் இறப்பதற்கு முன்னதாக தற்கொலை செய்து கொள்வதற்கான கடிதம் எழுதியிருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இது அவர் எழுதிய கடிதம்தான் என்பதை கையெழுத்து நிபுணர் உறுதி செய்து இருப்பதாகவும் நீதிபதி ரசிஹா கஸாலி தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்