கண்மூடித்தனமாக குற்றச்சாட்டுகள் அல்ல

டான்ஸ்ரீ முகைதீன் யாசின் நாட்டின் பிரதமராக இருந்த போது ஜன விபாவா திட்டத்தில் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாக கொண்டு வரப்பட்டுள்ள 4 குற்றச்சாட்டுகள், கண்மூடித்தனமான குற்றச்சாட்டுகள் அல்ல என்று புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றம் தனது எழுத்துப்பூர்வமான தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

இந்த நான்கு குற்றச்சாட்டுகளிலிருந்து முகைதீனை விடுதலை செய்து இருக்கும் கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து, அந்த நான்கு குற்றச்சாட்டுகளும் விசாரிக்கப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ள அப்பீல் நீதிமன்றத்தின் எழுத்துப்பூர்வமான தீர்ப்பு கடந்த வாரம் வெளியிடப்பட்டுள்ளது.

முகைதீனுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள ஒவ்வொரு குற்றச்சாட்டிலும் அடிப்படை முகாந்திரங்கள் இருப்பதற்கான ஆதாரங்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம் மிகத் தெளிவாக பட்டியலிட்டு இருப்பதையும் மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவிற்கு தலைமையேற்ற அப்பீல் நீதிமன்ற நீதிபதி டத்தோ ஹதாரியா சையத் இஸ்மாயில் தமது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் அந்த குற்றங்கள் எவ்வாறு நடந்தன என்பது குறித்து விரிவான விவரங்களை பிராசிகியூஷன் தரப்பு தர வேண்டியதில்லை. மாறாக, வழக்கு விசாரணையின் போது வழங்கினால் போதுமானதாகும் என்று நீதிபதி டத்தோ ஹதாரியா தெளிவுபடுத்தியுள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்