கிடங்கில் தீ : இருவர் காயம் – 7 வாகனஙள் நாசம் !

பினாங்கு, பெர்மாத்தாங் பாவோ ஜாலான் பெர்மாடாங் ஜாங்கஸ் இல் உள்ள கிடங்கு ஒன்றில் ஏற்பட்டத் தீ விபத்தில் இரு வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தீக்காயம் ஏற்பட்டது. அதே சமயம், 7 வாகனங்கள் தீயில் நாசமாகின.

இந்தத் தீ விபத்து இன்று காலை 11.00 மணி அளவில் நேர்ந்ததாகவும் அந்தக் கிடங்கு 80 விழுக்காடு தீயில் அழிந்ததாகவும் பினாங்கு மாநில தீயணைப்பு – மீட்புப் படையின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

இவ்விபத்து ஏற்பட்டக் காரணம் குறித்து தீயணைப்பு புலனாய்வு அதிகாரி விசாரணை செய்து வருவதாவும் அவர் சொன்னார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்