கிராபிக் வரைவாளர் மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூர், மார்ச் 1 –

கடந்த வாரம் ஓர் இந்தியப் பிரஜைக்கு சொந்தமான 2 லட்சத்து 66 ஆயிரத்து 50 வெள்ளி மதிப்புள்ள தங்கப் பாலம் மற்றும் கைப்பேசியை கொள்ளையடித்ததாக கிராபிக் வரைவாளர் ஒருவர் கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

ம். ரமேஷ் ராஜ் என்ற அந்த கிராபிக் வரைவாளர், இன்னும் பிடிபடாமல் இருக்கும் மேலும் ஒரு நபருடன் கூட்டாக சேர்ந்து கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி பிற்பகல் 2.10 மணியளவில் கோலாலம்பூர், Masjid India-வில் ஓர் உணவகத்தின் பின்புறம் மொகமட் முபாராக் சிக்கான்டெர் என்பவருக்கு சொந்தமான மேற்கண்ட உடமைகளை கொள்ளையடித்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

இதே நீதிமன்றத்தில் உணவு விநியோகிப்பாளரான 31 வயது ஜ. பரான்சிஸ் என்பவரும் குற்றஞ்சாட்டப்பட்டார். கடந்த பிப்ரவரி 21 ஆம் தேதி பிற்பகல் 2.20 மணியளவில் கோலாலம்பூர், டாங் வாங்கி யில் உள்ள ஓர் ஆடம்பர அடுக்குமாடி வீட்டில் 51 வயதுடைய மொஹமட் சைனுடின் அப்துல்லா என்பவருக்கு சொந்தமான 25 ஆயிரம் ஸ்தெர்லிங் பௌன் அல்லது ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 750 வெள்ளியை கொள்ளையிட்டதாக பிரான்சிஸ் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்